யாழ்ப்பாண வணிகர் கழகம் மிக நீண்ட ஒரு வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாகும். பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் இடையிடையே பல தடங்கல்களை தாண்டி நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து செயற்பட்டுவந்த ஒரு அமைப்பாகும்.
யாழ் குடாநாட்டு இடப்பெயர்வுக்குப் பிற்பட்ட காலமான 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியில் தனது செயற்பாடுகளை தொடர்ச்சியாக நிர்வாக நடைமுறையை செயற்படுத்திக் கொண்டு வருகின்றது. போர்சூழ்நிலை மற்றும் சில அசாதாரன சூழ்நிலை காரணமாக செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்க, அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றுடன் எமது நோக்கத்தை நிறைவேற்ற இணைந்து செயற்பட்டுள்ளோம்.
போர் காரணமாக ஏ9 பாதை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக 1996ஆம் ஆண்டுக்குப் பின்பு 2009 ஆண்டு வரையான காலப்பகுதியில் வட மாகாணத்துக்கான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் கடல் வழியாக கப்பல் மூலம் மேற்கொள்வதற்கு யாழ் வணிகர் கழகத்தின் பங்களிப்பு மெச்சத்தக்கதாக அமைந்தது. இதன்மூலம் மக்களை பட்டினியில் இருந்து பாதுகாக்க இலாப நோக்கத்துக்கு அப்பால் மனிதாபிமான ரீதியிலே பெரும்பங்கை வகித்துள்ளது.
நாம் ஒரு கம்பனிச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சொந்த காணி கட்டடங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அமைப்பாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம். எமது நோக்கம் வர்த்தக பொருளாதார ரீதியில் எமது பிரதேசத்தை வளப்படுத்துவதுடன் சமூகப்பணியாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள், போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலை இடைவிலகிய மாணவர்களை பாடசாலைக்கு இணைப்பது, கல்வி மேம்பாடு, ஆதரவற்ற சிறுவர்களுக்கான கல்வி மேம்பாடு மற்றும் இருப்பிடவசதி போன்ற செயற்பாடுகள் மற்றும் சமூகப்பணிகள், அனர்தங்கள் நிகழும் போது ஏற்படும் நிவாரண செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகள் மற்றும் வடமாகாணத்தின் தற்சார்பு பொருளாதாரத்தில் தன்நிறைவு காணும் எமது முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து எமது பணியை சிறந்த முறையில் உறுதியுடன் முன்னெடுப்போம்.
1996க்குப் பின்னர் செயற்பட்ட தலைமைத்துவங்கள்
ஆண்டு | தலைவர் | செயலாளர் | பொருளாளர் |
---|---|---|---|
1996 | திரு. சி.பாலச்சந்திரன் | திரு. பா. லிங்கநாதன் | திரு.பே. நாகரெத்தினம் |
1997 | திரு. தி.குஞ்சிதபாதம் | திரு. சி.நமசிவாயம் | திரு.பே. நாகரெத்தினம் |
1998 | திரு.க. மகாதேவசிவம் | திரு. சி.நமசிவாயம் | திரு. த. சற்குணராசா |
1999 | திரு.இ. ஜனக்குமார் | திரு. தி.சிவதாசன் | திரு. க. கனகசபாபதி |
2000 | திரு. த. சற்குணராசா | திரு. வி.குலரத்தினம் | திரு. கு. தர்மராசா |
2001 | திரு. வி.குலரத்தினம் | திரு.கா.நித்தியானந்தன் | திரு. தி.சிவதாசன் |
2002 | திரு.இ. ஜெயசேகரன் | திரு.கா.நித்தியானந்தன் | திரு.கு.கங்கைவேணியன் |
2003 | திரு.இ.ஜெயசேகரன் | திரு.இ.ஜனக்குமார் | திரு.கு.கங்கைவேணியன் |
2004 | திரு.இ.ஜெயராசா | திரு.இ.ஜனக்குமார் | திரு. ச. சிவகுமரன் |
2005 | திரு.இ. ஜெயராசா | திரு. ச. சிவகுமரன் | திரு. த.குணசிங்கம் |
2006 | திரு.இ.ஜனக்குமார் | திரு. த.சற்குணராசா | திரு. த.குணசிங்கம் |
2007-2009 | திரு.இ.ஜனக்குமார் | திரு. த.சற்குணராசா | திரு.இ.ஜெயராசா |
2010-2016 | திரு.இ.ஜெயசேகரன் | திரு.இ.ஜனக்குமார் | திரு.இ.ஜெயராசா |
2017 | திரு.இ.ஜனக்குமார் | திரு. ச.சிவகுமரன் | திரு. சு.தினேசன் |
2018-2019 | திரு.இ.ஜனக்குமார் | திரு. சி.கேசவன் | திரு. சு.தினேசன் |
2020 | திரு.இ.ஜெயசேகரன் | திரு. ச.சிவலோகேசன் | திரு. சு. சுதர்சன் |