
ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் கௌரவ ஜீலீசங் அவர்களும், அவர்களது தூதரக அதிகாரிகளும் எமது பணிமனைக்கு வருகை தந்தனர். கழகத்தின் உபதலைவர் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்போது யாழ்ப்பாணத்தில் வணிக முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் பற்றியும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.