
23.09.2016 அன்று யாழ் வணிகா் கழகத்தின் நிா்வாக சபை உறுப்பினா்களும், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் மொத்தவா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள யாழ் நகர வா்த்தகா்களும், யாழ் அரசாங்க அதிபா் மற்றும் ஏனைய அதிகாாிகளையும் ஒருங்கே சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மொத்த விற்பனை வா்த்தகா்கள் தங்கள் பார ஊா்திகளை யாழ் ஆஸ்பத்திாி வீதியில் நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நானாவித பொருட்களை கொழும்பிலிருந்து நேரடியாக தருவிப்பதால் உள்ளுா் வா்த்தகா்கள் பாதிக்கப்படுவதும் குறித்தும் கருத்து பாிமாற்றங்கள் இடம்பெற்றன. இச் சந்திப்பு மிக வெற்றிகரமானதாக அமைந்ததுடன் அரசாங்க அதிபாின் உறுதி மொழிகளும் வா்த்தகா்களுக்கு ஆறுதல் அளித்தது எனலாம். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்