
யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடன் யாழ் வணிகர் கழக பணிமனையில் தலைவர் திரு.இ. ஜெயசேகரன் தலைமையில் நவீன சந்தை வர்த்தகர்களின் வாடகை அதிகரிப்பு, உரிமை மாற்றம், யாழ் மாநகரசபை நவீன சந்தை கட்டிடத்தில் சுகாதாரம், மின்சார விநியோகம் போன்றவற்றை சீர் செய்தல் தொடர்பாகவும் சில சுற்றுலா விடுதியின் வியாபார வரிக்குரிய காசோலையை யாழ் மாநகரசபையினர் திருப்பி அனுப்பியது தொடர்பாகவும், யாழ் தனியார் வைத்தியசாலையின் சோலை வரி அதிகரிப்பு தொடர்பாகவும், அதை மாதாந்த அடிப்படையில் செலுத்த மறுக்கப்பட்டது தொடர்பாகவும் 03.10.2020 சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில்ஆராயப்பட்டது. இவ் விடயங்கள் தொடர்பில் வருகைதந்த மாநகரசபை உறுப்பினர்கள் சாதகமாக பரிசீலித்ததுடன் தாம் வருகின்ற மாதாந்த கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகவும் கூறினர். இதன்போது எடுக்கப்ட்ட படங்களை இங்கே காணலாம்.