
19.07.2017 அன்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வைத்தியகலாநிதி விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாண வணிகர் கழகத்திற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டார். இவ் விஐயத்தின் போது யாழ் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு சிங்கப்பூர் எவ்வகையில் உதவ முடியும் என ஆராயப்பட்டது. சிங்கப்பூர் வர்த்தக மன்றத்திற்கும் யாழ் வர்த்தக மன்றங்களுக்குமிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறினார். யாழ் வணிகர் கழகம் சார்பாக யாழ் மாவட்டத்தில் தற்போதைய சவால்கள் எவை என்பது பற்றியும் அதற்கான தீர்வுகள் எப்படி அமைய முடியும் என்பது பற்றியும் சிங்கப்பூர் எவ்வகையில் உதவ முடியும் எனவும் கூறும் விளக்கக் கடிதம் யாழ் வணிகர் கழகத் தலைவரால் வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சரின் விஐயம் தொடர்பான படங்களை இங்கே காணலாம்.