
யாழ் நகரை அண்டிய பொம்மைவெளி பிரதேசத்தில் உள்ள வசந்தபுரம், நித்தியஒளி மற்றும் சாபி நகா் ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள், யாழ்ப்பாணத்தில் தொடா்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக வீடு முழுவதும் வெள்ளம் சுழ்ந்திருந்தமையினால் தமது இருப்பிடங்களை இழந்து, பொது இடங்களில் சமைத்து உண்டதுடன், அவா்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்து, சுகாதார வசதிகள் சீா்குலைந்து சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகியிருந்தனா்.
இம்மக்களுக்கு உதவும்முகமாக இன்று மூன்றாவது நாளாக 13.11.2017 சாபிநகா் கிராமத்துக்குச் சென்ற யாழ் வணிகா் கழகத் தலைவரும், வடமாகாணசபை உறுப்பினருமான திரு.இ.ஜெயசேகரன் 5 நாட்களுக்குப் போதுமான உலா் உணவுப் பொருட்களை வழங்கியபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.
சென்ற வாரம் இவ்வாறு பாதிப்படைந்த வசந்தபுரம், நித்தியஒளி ஆகிய கிராமங்களுக்கும் இதேபோல் உதவித்திட்டங்கள் திரு.இ.ஜெயசேகரன் அவா்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.