வடமாகாண சபை உறுப்பினரும், யாழ் வணிகா் கழக உப தலைவருமான இரத்தினலிங்கம் ஜெயசேகரன் அவா்கள், முன்னா் உறுதியளித்தவாறு வட மாகாண சபையில் மாதாந்தம் பெற்றுக் கொள்ளும் தனது சம்பளப்பணத்தை ஒவ்வொரு மாதமும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கி வருகின்றாா். அந்த வகையில் தனது 3 மாத சம்பளமான 220,000/- ரூபாவைக் கொண்டு 6 வது முறையாக 14 பேருக்கு வாழ்வாதார உதவிகளை கடந்த 27.09.2018 வியாழக்கிழமைஅன்று யாழ் வணிகா் கழக பணிமனையில் வைத்து வழங்கினாா்.அந்தவகையில் எட்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக 107,500/- ரூபா பணமும், ஸ்ரீ மீனாட்சி சனசமூகநிலையத்திற்கு 15,000/- ரூபா பெறுமதியான 20 கதிரைகளும், ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்திற்கு 26,000/- ரூபா பெறுமதியான அன்னதான பாத்திரங்களும், சென்.றோக்ஸ் மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்கத்திற்கு15,000/- ரூபா பெறுமதியான பொருட்களும், புங்குடுதீவு கலப்பெருமன்றத்திற்கு 15,000/- ரூபா பெறுமதியான பொருட்களும், பாவிரு கிறிஸ்தோபர் என்பவருக்கு 16,500/- ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டியும் வழங்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்

Recent post