எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள்

1. யாழ் குடாநாட்டின் நன்னீர் திட்டத்தை பாதுகாப்பதற்கும் மக்களுக்கான நீர் விநியோகத்தை செயற்படுத்துவதற்குமான திட்டங்கள்.

  1. ஆறுமுகன் திட்டம்
  2. வழுக்கையாறுத்திட்டம்
  3. உப்பாற்றுத் திட்டம்
  4. வடமராட்சி நீர் ஏரித்திட்டம்

இவைகளை விரைவாக அமுல்நடத்தப்படுமிடத்து யாழ் குடாநாட்டிற்கான நன்னீரை பாதுகாப்பதுடன் பொதுமக்களுக்கான நீர் விநியோகத்திட்டத்தையும் மேற்கொள்ள முடியும்.

2. குடாநாட்டு மக்கள் தங்கள் நீர்த் தேவைகளை தங்கள் சொந்த கிணறுகளில் இருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். தற்போதைய நிலையில் நிலத்தடி நீர் மாசடைந்து காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக அதிகளவான கிருமிநாசினிப் பாவனையும் மலசலகூட குழிகளில் உள்ள மலக்கழிவுகள் நிலத்திற்கு கீழ் ஊறிச் சென்று நன்னீரை மாசடையச் செய்கின்றது. இதில் இருந்து மீளுவதற்கு பாதாள சாக்கடைத்திட்டத்தை ( sewerage project) அமுல் நடத்த வேண்டும்.

3. குடாநாட்டில் உள்ள சேதமடைந்த கடல் நீர் தடுப்பனைகளை உடனடியாக புதிதாக அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் உவர் நீர் வளமான பிரதேசங்களை கடல் நீர் உட்புகாமல் பாதுகாக்க முடியும்.

4. சகல வசதிகள் அடங்கிய மீன்பிடித் துறைமுகங்கள் மயிலிட்டி, பருத்தித்துறை, குருநகர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும்.